தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மா என்று கூறிவிட்டு ஜெயலலிதா கூறியதை மறந்து பாஜவுடன் பொருந்தா கூட்டணி: நாமக்கல் பிரசாரத்தில் அதிமுக மீது விஜய் கடும் தாக்கு

நாமக்கல்: தமிழகத்தின் நன்மைக்காக எதையும் செய்யாத பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது, மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மா என்று கூறிவிட்டு ஜெயலலிதா மேடம் கூறியதை மறந்து பாஜவுடன் பொருந்தா கூட்டணி வைத்துள்ளதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நாமக்கல்லில் நடந்த பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் கடுமையாக தாக்கி பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நாமக்கல்லில் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்து பிரசார சொகுசு பஸ்சில் மதியம் 2.45 மணியளவில் பிரசாரம் செய்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறியதை மீண்டும் இங்கு தெரிவிக்கிறேன். இந்த பாசிச பாஜ அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம். மறைமுக உறவுக்காரர்களாக எப்பொழுதும் இருக்க மாட்டோம். மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா மேடம் சொன்ன விஷயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு பொருந்தா கூட்டணியை அதிமுகவினர் அமைத்துள்ளனர். கேட்டால் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று சொல்கிறார்கள். அதிமுகவை போல் நாங்கள் இருக்க மாட்டோம்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இந்த பாஜ அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது? நீட்டை ஒழித்து விட்டார்களா? கல்விக்கு தேவையான முழு நிதியை கொடுத்தார்களா? தமிழகத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டார்களா? பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேட்கவில்லை. எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கூட்டு பொரியல் அப்பளம் எனக் கிண்டி கொள்ளட்டும். அதெல்லாம் நமக்கு எதற்கு. அதிமுக-பாஜ நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்களுடைய கூட்டணி மேல் மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என அனைவருக்கும் தெரியும்.

இந்த கூட்டத்தை பார்க்கும்போது நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை தெரிகிறது. என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா? பார்த்துவிடலாம் ஒரு கை பாத்துக்கலாம். சத்தியமாக சொல்கிறேன் நானும் இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பு என்னமோ ஏதோ என்று நினைத்தேன். ஆனால் சத்தியமாக ஒரு கை பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு விஜய் பேசினார். நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இந்த பாஜ அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது? நீட்டை ஒழித்து விட்டார்களா? கல்விக்கு தேவையான முழு நிதியை கொடுத்தார்களா?

* போலீசாருடன் தகராறு

நடிகர் விஜய்யின் பிரசாரத்திற்காக பைக்குகளில் வந்திருந்த தொண்டர்கள் கட்சிக்கொடி கட்டிக்கொண்டு சாலைகளில் தாறுமாறாக மக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றனர். மேலும் பலர் அருகில் உள்ள கடை, குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு கட்சிக்கொடியை ஆட்டியபடி கோஷங்களை எழுப்பினர். அவர்களை நிர்வாகிகள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் இறங்கி வரமறுத்தனர். இதனால் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

* தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து ஆட்டூழியம்

விஜய் நாமக்கல் மாவட்ட எல்லைக்கு வந்த பிறகு அவரது வாகனத்தை ஏராளமான தொண்டர்கள் பின்தொடர்ந்து செல்ல தொடங்கினர். தேசிய நெடுஞ்சாலையில் விஜய்யின் வாகனம் ஒரு புறம் செல்ல அவரை பின் தொடர்ந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் எதிர் திசையில் சென்றன. திடீரென கூட்டமாக எதிர் திசையில் வாகனங்கள் வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் திகைத்து போய் செய்வதறியாமல் பிரேக் போட்டு தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து ஏற்படும் எனத்தெரிந்தும் எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வந்த தவெகவினரை பார்த்து வாகன ஓட்டிகள் திட்டியபடி சென்றனர். நாமக்கல் நகரத்திற்குள் விஜய்யை பார்ப்பதற்காக திரண்டிருந்த தொண்டர்களும், ரசிகர்களும் அங்கிருந்த பாலத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் திகைத்தனர்.

* வெயிலில் காத்துக்கிடந்த ரசிகர்கள்

நேற்று காலை 8.45 மணிக்கு தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் பிரசாரம் செய்வார் என கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கூறியிருந்தார். இதனால் விஜய் பிரசாரம் செய்யும் இடத்தில் காலை முதலே கட்சியினர் திரண்டிருந்தனர். ஆனால், அவர் மதியம் 2.45 மணியளவில்தான் நாமக்கல் வந்தடைந்தார். இதனால் 6 மணி நேரம் வெயிலில் காத்துக்கிடந்த ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெண்கள் உள்பட பலர் மயக்கம் அடைந்தனர்.

* கடைகள் அடைப்பு; வணிகர்கள் பாதிப்பு

நடிகர் விஜய்யின் வருகையையொட்டி, நேற்று நாமக்கல் நகரில் உள்ள பிரதான சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிரசாரம் நடைபெற்ற சேலம் ரோட்டில் உள்ள பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதனால், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதலே நாமக்கல் நகரில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, துறையூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் முதலைப்பட்டி பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. அந்த பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வராமலேயே சென்றுவிட்டன. இதனால், காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். விஜய் குறிப்பிட்ட நேரத்தில் நாமக்கல் நகரில் பிரசாரத்திற்கு வரவில்லை. மேலும், விஜய்யின் பிரசார வாகனத்திற்கு பின்னால் அவரது கட்சி தொண்டர்கள் டூவீலர்களில் கொடியுடன் பின்தொடர்ந்து வந்ததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

* போக்குவரத்துக்கு இடையூறு

நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு விஜய்யின் பரப்புரை கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து விமான நிலையம் வந்து தனி விமானத்தில் 8.45 மணிக்குத்தான் புறப்பட்டார். தொண்டர்கள் சுமார் 6 மணிநேரம் காத்திருந்த நிலையில் 2.45 மணிக்கு பிரசார பகுதிக்கு வந்தார் விஜய். பெண்கள், குழந்தைகள் கடும் வெயிலில் காத்திருந்தனர். அதே நேரத்தில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து வந்த தொண்டர்கள், எந்தவித போக்குவரத்து விதிகளையும் பின்பற்றவில்லை. வீட்டின் உரிமையாளர்கள், தங்களது மாடிப்படியில் ஏறாதீர்கள் என்று எச்சரித்தும் தொண்டர்கள் கேட்கவில்லை. மாறாக வீட்டு மாடியில் மட்டுமன்றி, மின்கம்பங்களிலும் தொட்டிகளிலும் ஏறியபடியும், தொங்கியபடியும் நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

* ஆரத்தி எடுத்த ஆசிரியைகளுக்கு ரூ.500 பரிசு

திருச்சி - நாமக்கல் சாலையில் எம்.களத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் விஜய் ஏற வந்தபோது, அங்கிருந்த 10 ஆசிரியைகள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். அந்த தட்டில் விஜய் ரூ.500 வழங்கினார். அப்போது அருகில் நின்றிருந்த 7வது படித்து வரும் சஸ்வந்த் என்ற மாணவனுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். இதனை பார்த்த ஆரத்தி எடுத்த ஆசிரியைகளும் ஆட்டோ கிராப் கேட்ட போது விஜய் மறுத்து அங்கிருந்து காரில் ஏறி சென்றார்.

* விஜய் பவுன்சர்கள் கார் விபத்தில் சிக்கியது

நாமக்கல், கரூரில் பிரசாரம் பிரசாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு திருச்சி வந்தார். பின்னர் விஜய், விமான நிலையத்தில் இருந்து காரில் நாமக்கல் புறப்பட்டு சென்றார். நொச்சியம், தொட்டியம், முசிறி, குளித்தலை வழியாக 90 கிலோ மீட்டர் சாலை வழியாக நாமக்கல் சென்றடைந்தார். அவரது காருக்கு முன்னால் 2, பின்னால் 2 கார்கள் என பவுன்சர்களின் கார்கள் அணிவகுத்து சென்றன. காலை 10.45 மணியளவில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலை என்ற இடத்தில் சென்றபோது விஜய் காருக்கு பின்னால் வந்த கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால், அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது. இதில் 2 கார்களின் பின்பகுதி, முன்பகுதி சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த கார்கள் நிற்காமல் விஜய் காரை பின்தொடர்ந்து அதிவேகமாக சென்றன.

Advertisement

Related News