சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அவர் பாஜ மாநிலத் தலைவர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜ தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் அடுத்த மாநிலத் தலைவர் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்த மாநில தலைவர் யார் என்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கட்சியை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வருகைக்காக, காவல்துறை தரப்பில் பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.