அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சென்னை: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.
Advertisement
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement