அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் மின்னோபோலீஸ் நகரில் கத்தோலிக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் நாள் வகுப்புகள் தொடங்கின. இதையொட்டி பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாணவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 8, 10 வயதான 2 சிறுவகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது வாலிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement
Advertisement