அமெரிக்க குடிமக்களை ஏமாற்றிய போலி கால்சென்டர்களில் 7 கிலோ தங்கம் சிக்கியது: அமலாக்கத்துறை அதிரடி
Advertisement
மேக்னாடெல் பிபீஎஸ் கன்சல்டன்ஸ் மற்றும் எல்எல்பி மீதான சைபர் மோசடி வழக்கின் ஒரு பகுதியாக அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜபல்பூர் மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளின்போது 7கிலோ தங்கம், 62கிலோ வெள்ளி, ரூ1.18கோடி ரொக்கம் மற்றும் ரூ.9.2கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களான சஞ்சய் மோர் மற்றும் அஜித் சோனி ஆகியோரை ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Advertisement