உலக நாடுகள் மீதான வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது : அதிபர் ட்ரம்ப் பேச்சு
11:28 AM Aug 09, 2025 IST
வாஷிங்டன் : உலக நாடுகள் மீதான வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரி விதிப்புக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், இந்த மிகப்பெரிய தொகைகளை மீண்டும் பெற அமெரிக்காவிற்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது என்றும் வரலாற்றில் என்னை போன்று சோதனைகள், இன்னல்களை கடந்து வந்தவர் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.