அமெரிக்காவில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த இந்தியர் சுட்டுக்கொலை..!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த 51 வயதான இந்தியர் ராகேஷ் என்பவரை ஸ்டேன்லி என்பவர் சுட்டுகொன்றுள்ளார். 37 வயதான ஸ்டான்லி யூஜின் வெஸ்ட் மோட்டலில் விருந்தினராக இருந்துள்ளார். மேலும் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையுடன் சுமார் இரண்டு வாரங்களாக அங்கேயே தங்கி இருந்துள்ளார். இவர்களுக்கிடையே கருது வேறுபாடு இருந்துள்ளது. பின்னர் பார்க்கிங் இடத்தில் ஒரு குழந்தையுடன் காரில் அப்பெண் அமர்ந்திருந்த போது, அவரது கூட்டாளியான ஸ்டான்லி அவரை கழுத்தில் சுட்டுள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த ஓட்டல் மேலாளர் ராகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த ஸ்டேன்லி ஓட்டல் மேலாளர் ராகேஷை தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஓட்டல் மேலாளர் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் அப்பெண்ணுக்கு காயங்கள் இருந்தபோதிலும், அவர் அருகிலுள்ள ஒரு ஆட்டோ பழுதுபார்க்கும் கடைக்குச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து. ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியான ஸ்டேன்லி தப்பி ஓடி பிட்ஸ்பர்க் அருகே குன்றுப்பகுதியில் மறைந்திருந்தார். பின்னர் ஸ்டேன்லி தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் துப்பாக்கியால் சுட்டு ஸ்டேன்லியை கைது செய்தனர்.