அமெரிக்காவின் கல்வித்துறையில் 1,400 ஊழியர்கள் பணி நீக்கம்: டிரம்ப் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
Advertisement
இந்நிலையில் கல்வித் துறையில் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு அரசு முடிவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாஸ்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் 1400 ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட அவசரகால மேல்முறையீட்டில் அதிபர் டிரம்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்வித்துறையில் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement