அமெரிக்காவில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 30 பேர் படுகாயம்
Advertisement
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சான்டா மவுனிகா பவுல்வர்ட் பகுதியில் இரவு விடுதி ஒன்று செயல்பட்டடு வருகிறது. இரவு விடுதிக்குள் செல்வதற்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று இரவு விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement