ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை: திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பத்தூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் 191 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 191 பேர் மீதான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமீல் பாஷா என்பவர் உயிரிழந்ததால் வன்முறை வெடித்தது. ஆம்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றபோது 71 காவலர்கள் காயம் அடைந்தனர்.
Advertisement
Advertisement