ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: தவெகவினர் மீது வழக்குப் பதிவு
கரூர்: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரில் த.வெ.க.வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 27ம் தேதி இரவு 7.15 மணிக்கு விஜய் பிரச்சாரத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. ஒரு பெண், 2 ஆண்களை ஏற்றிக் கொண்டு அமராவதி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது. மருத்துவமனையில் 2 பேரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்தார். 2 பேரின் உடல்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு வேலுச்சாமிபுரம் திரும்பினேன். வேலுச்சாமிபுரம் அட்சயா மருத்துவமனை அருகே இரவு 8.15க்கு வந்தபோது 10க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து தாக்கி மிரட்டினர். ஆம்புலன்ஸை எடுக்கவிடாமல், கல்லால் கண்ணாடி, லைட்டுகளை உடைத்தும் சேதப்படுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் தகவல். உயிரைக் காப்பாற்ற வந்தேன் என தெரிவித்தும் 10க்கும் மேற்பட்டோர் தன்னை தாக்கியதாக ஈஸ்வரமூர்த்தி புகார் கூறினார். தனது உரிமையாளர் கூறியதை அடுத்து கரூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன் என தெரிவித்தார்.