பெக்கன்ஹாம்: இங்கிலாந்து சென்றுள்ள, 19 வயதுக்குட்பட்ட இந்திய இளையோர் கிரிக்கெட் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 450 ரன் குவித்தது. அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, 102, விஹான் மல்கோத்ரா 67, அபிக்யான் குண்டு 85, ராகுல் குமார் 85 ரன் குவித்தனர். இந்நிலையில் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. 112.5 ஓவர் ஆடிய இந்தியா 540 ரன் குவித்து ஆல் அவுட்டானது.