பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரைக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த தடை : ஒன்றிய அரசு உத்தரவு
Advertisement
அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரை தெற்கு காஷ்மீர் பகுதியான பஹல்காம் வழியாகவும் வடக்கு காஷ்மீர் பகுதியான பால்டல் வழியாகவும் நடைபெறும். இந்த இரண்டு வழித்தடங்களிலும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த, ஹெலிகாப்டர் சேவைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் அமர்நாத் யாத்திரை பகுதியில் ஜூலை 1ம் முதல் ஆகஸ்ட் 10 வரை விமானங்கள் பறப்பதற்கு முழு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகளுக்கான ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கு இந்த பகுதியில் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement