தொடர்ந்து பெய்த கனமழையால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகின்றது. மேலும் காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 36 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக நேற்று அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களும் மழையினால் சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வானிலை சீரானவுடன் இன்று யாத்திரை மீண்டும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement