ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் மாற்று கட்சியின் 100 பேர் திமுகவில் இணைந்தனர்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வரவேற்றார்
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் வழக்கறிஞருமான சி.ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில், வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நேற்று வடக்கு ஒன்றியம் மற்றும் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட தவெக உள்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று, புதிதாக திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களை வரவேற்று, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இளைஞர்கள், பெண்களை அதிகளவில் திமுகவில் இணைத்த ஒன்றிய செயலாளர் சி.ஜெ.சீனிவாசனுக்கு பாராட்டு தெரிவித்தார். அனைத்து நிர்வாகிகளும் கட்சியில் அதிகளவு இளைஞர்களை இணைக்க பாடுபட வேண்டும் என்று எஸ்.சந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இதில் பேரூர் செயலாளர் சி.ஜெ.செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் தண்டபாணி, ஒன்றிய பொருளாளர் எஸ்.பி.ஐயப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி செங்கைய்யா, பேரூராட்சி தலைவர் மணிமேகலை, இளைஞரணி நிர்வாகிகள் கலீல், ஜெகதீஷ், சந்திரபாபு, திருமால், சுதீர் ராயல், சக்திவேல், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.