தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அலமாதியில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையம் திறப்பு: ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு

Advertisement

புழல்: அலமாதியில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையத்தினை மீண்டும் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் திறந்து வைத்தார். செங்குன்றம் அடுத்த அலமாதி - திருவள்ளூர் நெடுஞ்சாலை, சிவன் கோயில் அருகே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், கிராமப்புற மருத்துவ சேவை மையம் 1952ம் வருடம் முதல் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த கொரோனா காலத்தில் 2019ம் ஆண்டு கிராமப்புற மருத்துவ சேவை மையம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கி, கிராமப்புற மருத்துவ சேவை மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம் மட்டுமின்றி குழந்தைகள் மருத்துவம், கண் சிகிச்சை, ரத்த பரிசோதனை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் அலமாதி, எடப்பாளையம் பாலாஜி நகர், பூச்சி அத்திப்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்துகொண்டு, சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இந்நிகழ்வில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலுமினி அசோசியேசன் தலைவர் வரதராஜன், துணை தலைவர் மாலதி, செயலாளர் ராமலிங்கம், இணை செயலாளர் லக்ஷ்மண மூர்த்தி, துணை செயலாளர் சந்திரசேகர், சமூக மருத்துவத்துறை தலைவர் சீனிவாசன், டாக்டர் காளிதாஸ், டாக்டர் சிட்டிபாபு, செயலாளர் செந்தில், இணை செயலாளர் யுவஸ்ரீ, மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டமைப்பு மருத்துவர்கள், கிராம நிர்வாகிகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News