தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே பாடத்திட்டத்தின் கீழ் அலோபதி, ஆயுர்வேதம் மருத்துவம்.. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி : அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை ஒருங்கிணைத்து புதிய படிப்பை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆங்கில மருத்துவமனை அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை ஒரே கல்வி பாடத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தார். இந்த திட்டம் கருத்தியல் நிலையில் இருப்பதாகவும் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

Advertisement

இதற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிற்போக்கு தனமான இந்த கல்வி திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜிப்மர் நிர்வாகம், அலோபதி, ஆயுர்வேதா ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட படிப்பு என்று கூறியுள்ளது. ஒருவருட பயிற்சியுடன் கூடிய இரட்டை பட்டபடிப்பாக இருக்கும் என்றும் முதற்கட்டத்திற்கான பாடத்திட்டம் தயாராக உள்ளதாகவும் ஜிப்மர் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் புதிய படிப்புகள் மற்றும் பாடத் திட்டங்களை முடிவு செய்யும் தேசிய மருத்துவ ஆணையம், இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றும் ஆர்டிஐ தகவலில் கூறப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிஐஎம்எஸ் பட்டங்களை ஒன்றாக வழங்குவதற்கு இந்தியாவில் இதுவரை எந்த சட்டத்தின் கீழும் வழிவகை செய்யப்படவில்லை என்று கூறியுள்ள, டாக்டர் பாபு, எந்த அடிப்படை ஆய்வுகளும் இன்றி, தயாரிக்கப்பட்ட ஆரோவில் அறக்கட்டளையின் திட்டத்தை ஒன்றிய அரசு ஆதரிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Advertisement