மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்த கணவர்: கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு
இதையடுத்து, அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க ரூ.80 ஆயிரம் பணத்தை நோட்டாக கொடுக்காமல், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களாக சுமார் 20 மூட்டைகளில் கட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார். பின்னர், அந்த மூட்டைகளில் கொண்டு வந்த ரூ.80 ஆயிரம் நாணயங்களை நீதிபதி முன்னிலையில் அளித்தார். இந்த நாணய மூட்டைகளை பார்த்த நீதிபதி, நாணயங்களை கொண்டு சென்று நோட்டாக மாற்றி வர அறிவுரை வழங்கி, வழக்கை ஒத்திவைத்தார்.
இதையடுத்து, அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்த நாணயங்களை தனது காரில் ஏற்றி புறப்பட்டு சென்றார். மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்த கணவரால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.