கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினர்விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர். முதல் கட்டமாக உயிரிழந்த 30 குடும்பத்தினர்களை சிபிசிஐடி போலீசார் நேற்று அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவரின் மனைவி மற்றும் தாய், தந்தை என ஒவ்வொரு குடும்பத்திலும் தலா 3 பேர்கள் வீதம் 90 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறந்துபோன நபர் யாரிடம் விஷ சாராயம் வாங்கி குடித்தார், எத்தனை ஆண்டுகளாக குடிப்பழக்கம் உள்ளது உள்ளிட்ட விவரங்களை சிபிசிஐடி போலீசார் கேட்டனர்.