இறுதியில் அசத்தும் அல்காரஸ்
* இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நம்பர் 1 சின்னர்-நம்பர் 2 கார்லோஸ் அல்காரஸ் களம் காண உள்ளனர்.
* இருவரும் யுஎஸ் ஓபனில் 2வது முறையாக மோதுகின்றனர். இவர்கள், பைனலில் மோதுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே 2022ம் ஆண்டு யுஎஸ் ஓபன் காலிறுதியில் மோதினர். அதில் கார்லோஸ் வெற்றிப் பெற்றார்.
* இந்த ஆண்டு 3வது கிராண்ட் ஸ்லாம் போட்டி பைனலில் இருவரும் மோத உள்ளனர்.
* இந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் சின்னர் பைனலுக்கு முன்னேறி இருக்கிறார்.
* இந்த ஆண்டு ஆஸி, விம்பிள்டன் பட்டங்களை சின்னரும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கார்லோசும் கைப்பற்றி உள்ளனர்.
* 2024ம் ஆண்டு கார்லோஸ் 2, சின்னர் 2 என சம அளவில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.
* இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் கார்லோஸ் 9 ஆட்டங்களிலும், சின்னர் 5 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
* இருவரும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களும் இறுதி ஆட்டங்கள்தான். அவற்றில் 4-1 என்ற கணக்கில் கார்லோஸ் முன்னிலையில் உள்ளார்.