ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வேன் மோதி பலி!
08:38 AM Aug 16, 2025 IST
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழந்தார். பாபநாசம் நோக்கிச் சென்ற வேன் மூதாட்டி மீது மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.