ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குத் தடை கோரிய அமலாக்கத் துறை மனு தள்ளுபடி
Advertisement
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குத் தடை கோரிய அமலாக்கத் துறை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவை மீறி அமலாக்கத் துறை தனக்கு சம்மன் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் மனுவில் தகவல் தெரிவித்திருந்தார். வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மே மாதம் டாஸ்மாக் எம்.டி., பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
Advertisement