திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்: ஐகோர்ட் அதிரடி
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அபராதத்தை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஆக்.20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.