அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ இன்று அறிக்கை தாக்கல்?
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து, விசாரித்து வருகிறது. விசாரணை தொடங்கி, 37 நாட்கள் ஆன நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரி ஒருவர் மட்டும் வந்து எஸ்ஐயிடம் நேற்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் ஆக. 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், இன்று சிபிஐ அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்வார்களா அல்லது அவகாசம் கேட்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே சிவகங்கை மாவட்ட நீதிபதி உத்தரவுபடி, அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் மற்றும் சாட்சிகள் வீட்டுக்கு ரோந்து போலீசார் சென்று வருகின்றனர். மேலும், அரசு சார்பில் நவீன்குமார் உள்ளிட்ட சாட்சிகளான சக்தீஸ்வரன், பிரவீன்குமார் ஆகியோர் வீடுகளில் நேற்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.