அஜித்குமார் வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார்(28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, விசாரணை நீதிபதி கே.செல்வபாண்டி முன் நேற்று மீண்டும் வந்தது. இதற்காக சிறையில் உள்ள 5 பேரும், புதிதாக சேர்க்கப்பட்ட ராமச்சந்திரனும் ஆஜராகினர். பின்னர் விசாரணையை அக்.6ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement