அஜித்குமார் வழக்கு: போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்: வீடியோ எடுத்தவரிடம் மீண்டும் சிபிஐ விசாரணை
Advertisement
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 2 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அழைத்து வரப்பட்டு காவல் நீட்டிப்பிற்காக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரின் நீதிமன்ற காவலையும் ஆக. 13 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement