அஜித்குமார் மரண வழக்கு: டி.எஸ்.பி.யிடம் சிபிஐ விசாரணை
12:32 PM Aug 06, 2025 IST
சிவகங்கை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.யிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.