வான் எல்லைக்குள் ஊடுருவினால்...தக்க பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை
ரஷ்யா: உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ஊடுருவும் போக்கு தொடருமானால் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி தரப்படும் என நேட்டோ தெரிவித்துள்ளது. நேட்டோ நாடுகளின் உறுப்பினரான எஸ்டோனியாவின் வான் பரப்புக்குள் ரஷ்ய ராணு ஜெட் விமானங்கள் நுழைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா நாடுகளில் இருக்கும் நேட்டோ நாட்டு எல்லைகளில் சமீபகாலமாக ரஷ்யாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடந்தவாரம் போலந்து எல்லையில் தென்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பனர். தற்போது எஸ்டோனியா வான்பரப்புக்குள் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து ரஷ்ய ஜெட் விமானங்கள் சுமார் 12 மணி நேரம் பரந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம். இதனை ரஷ்யா தொடர்ந்து செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தது.
மேலும், இது குறித்து பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் களிடம் பேசிய நேட்டோ பொது செயலர் மார்பிரட் கடந்த வெள்ளியன்று எஸ்தோனியா வான் எல்லைக்குள் ரஷ்யாவின் மிக் 31 ரக போர் விமானங்கள் நுழைந்ததை ஏற்று கொள்ள இயலாது என்றும் இத்தகைய நிலை தொடருமானால் நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.