அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.