தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நம் நாட்டை பாதுகாப்பதில் உங்களின் பங்கு அளப்பரியது: விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

Advertisement

டெல்லி: உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப்பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது; துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகள். வீரத்துக்கும் தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது. நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது; விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாக வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம், ஜெய்ஹிந்த். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement