விமானப்படையில் 340 அதிகாரிகள் : பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு
தேர்வு: விமானப்படை பொது நுழைவுத் தேர்வு
(Air Force Common Admission Test- Exam 2026).
மொத்த காலியிடங்கள்: 340.
விமானப்படை பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. பிளையிங் பிராஞ்ச்- 38.
2. கிரவுண்ட் டியூட்டி- (டெக்னிக்கல்)- 188.
3. கிரவுண்ட் டியூட்டி- (டெக்னிக்கல் அல்லாதது)- 114.
வயது வரம்பு: 01.01.2027 தேதியின்படி 20 முதல் 24க்குள். டிஜிசிஏ வால் வழங்கப்பட்ட ‘கமர்ஷியல் பைலட் லைசென்ஸ்’ வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கிரவுண்ட் டியூட்டி பணிக்கு 20 முதல் 26க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.56,000- 1,77,600.
தகுதி: பிளையிங் பிராஞ்ச்- பிளஸ் 2 வில் கணித பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பணிகளுக்கான கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். என்சிசி சிறப்பு நுழைவு பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
உடற்தகுதி: 1.16 கி.மீ., தூரத்தை 10 நிமிடங்களில் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10 புஷ்அப்கள், 3 சின்அப்கள் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும்.
இந்திய விமானப் படையால் நடத்தப்படும் விமானப்படை பொது நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு டிசம்பர் 2026ல் அல்லது ஜனவரி 2027ல் பயிற்சி தொடங்கும்.விமானப்படையில் பிளையிங் பிரிவில் சேருபவர்களுக்கு 62 வாரங்களும், கிரவுண்ட் டியூட்டி பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையால் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.afcat.edcil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025.