மதுரை- சென்னை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு
அவனியாபுரம்: தொடர் விடுமுறை காரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு இன்றைய(செப்.7) விமான கட்டணம் ரூ.14,114 ஆக மூன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூ.4,200 வசூலிக்கப்படும் நிலையில் தொடர் விடுமுறை முடிந்ததையொட்டி மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் கட்டணம் மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமான ஆணையம் விமான பயண கட்டணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement