மும்பையில் விமான சேவை பாதிப்பு
07:07 PM Aug 09, 2025 IST
மும்பை: மும்பை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். நெட்வொர்க் கோளாறு காரணமாக ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்களின் புறப்பாடு தாமதம் ஏற்பட்டுள்ளது. நெட்வொர்க் கோளாறு சரிசெய்யப்பட்டு விமான சேவை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புகிறது.