டெல்லி நகரில் காற்றின் தரம் மிக மிக மோசடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்
டெல்லி: டெல்லி நகரில் காற்றின் தரம் மிக மிக மோசடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் டெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர அனைத்து நடுத்தர, கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை; அத்தியாவசிய தேவையை தவிர டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தவும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் காற்றின் தர குறியீடு 490ஐ தாண்டியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement