காற்று மாசு எதிரொலியாக டெல்லியில் இன்று முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!
டெல்லி: காற்று மாசு எதிரொலியாக டெல்லியில் இன்று முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக இன்று முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பதிவு செய்யப்படாத பிஎஸ் 3, 4 பெட்ரோல், டீசல் சரக்கு வாகனங்கள் மாநில எல்லைக்குள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சி.என்.ஜி., மின்சார வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே பிஎஸ் 3, 4 பெட்ரோல், டீசல் சரக்கு வாகனங்கள் டெல்லி எல்லைக்குள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வணிக சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் அரசின் தடையால் வணிகம் பாதிக்கப்படும் என கூட்டமைப்பு குற்றம் சாற்றியுள்ளது.