ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் தலைமுடி: பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் தரப்பட்ட உணவில் தலைமுடி இருந்த வழக்கில் பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் சுந்தர பரிபூரணம் பயணித்தபோது உணவு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட உணவில் தலைமுடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணி சுந்தர பரிபூரணம் ஊழியரிடம் புகார் அளித்தார். உணவில் தலைமுடி இருந்தது தொடர்பாக சுந்தர பரிபூரணம் சென்னை கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பயணிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏர் இந்தியா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement