குழந்தை தத்தெடுத்து தருவதாக பணம் பறித்த அதிமுக நிர்வாகி நீக்கம்: எடப்பாடி உத்தரவு
சேலம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குருசாமிபுரத்தை சேர்ந்த பாதமுத்து-பூண்டி மாதா தம்பதிக்கு குழந்தை தத்தெடுத்து தருவதாக சேலம் மாநகர மாவட்ட அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் அருண்குமார் வரவழைத்துள்ளார். அப்போது தனது தாய்மாமா வெற்றிவேலை போலி இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து தம்பதியிடம் ரூ.3 லட்சத்தை பறிதுள்ளார். புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமார், போலீசாக நடித்த வெற்றிவேல், கூட்டாளிகள் பழனிபாரதி மற்றும் மதுராஜ், ஏசுராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் கும்பலின் தலைவராக செயல்பட்ட அருண்குமாரை கட்சியில் இருந்தே நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement