தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதிமுக கூட்டணிக்கு நாங்கள் போகவில்லை எங்கள் கூட்டணிக்குதான் எடப்பாடி வந்திருக்கிறார்: டிடிவி கலாய்

மதுரை: ‘அதிமுக கூட்டணிக்கு நாங்கள் போகவில்லை. எங்கள் கூட்டணிக்குத்தான் எடப்பாடி வந்திருக்கிறார்’ என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். மதுரை கிழக்கு தொகுதி அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் கூறியது சரியான முடிவு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் தேவையான படிப்பிலும் சரி, வேலைவாய்ப்பிலும் உரிய பங்கீடு கிடைக்க வசதியாக இருக்கும். அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை.

எங்கள் கூட்டணியில்தான் எடப்பாடி வந்திருக்கிறார். எங்கள் பங்காளி சண்டையை ஓரமாக வைத்து விட்டோம். பாமகவில் அப்பா - மகன் பிரச்னை முடிந்து பழைய பலத்தோடு, எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி, மேலும் சில புதிய கட்சிகளும் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தது குறிப்பிட்ட நிகழ்வுக்காக தான். இன்று(நேற்று) மதுரை வரும் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கலாம். அவரை சந்திக்க நான் அனுமதி கேட்கவில்லை. இவ்வாறு கூறினார்.

* ‘ஓபிஎஸ், சசிகலாவுக்கு எப்போதும் முக்கியத்துவம்’

டிடிவி.தினகரன் கூறுகையில், ‘ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜ மாநில தலைவர் தினமும் கூறிவருகிறார். ஓபிஎஸ்க்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்களும், உரிமை மீட்பு குழுவும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும். சசிகலா எப்போதுமே பின்புலத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது’ என்றார்.

Related News