அதிமுகவுக்கு சோதனை அனைவரும் ஒன்றிணைவது அவசியம்: சசிகலா கடிதம்
சென்னை: அதிமுக பெரும் சோதனைக்குள்ளாகி உள்ளது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம்: அதிமுக இன்று பெரும் சோதனைக்குள்ளாகி உள்ளது. நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம். கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிமுக வெற்றிக்கு என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன். ஆனால், அதிமுக வெற்றி பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் அதிமுக இன்றுவரை வெற்றி பெறமுடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவது அவசியம். இவ்வாறு கூறியுள்ளார்.