அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு: அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதில்லை. ஆனால் இன்று என்னை சுற்றியுள்ளவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். கோடநாடு கொலைக்கு ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை. கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கெல்லாம் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி ஏன், கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement