தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான ராஜசேகரன் நேரில் ஆஜராகி, தமிழில் வாதங்களை முன்வைக்கத் துவங்கினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பதால், ஆங்கிலத்தில் வாதாட வேண்டும். அல்லது, வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மனுதாரரிடம், என்ன தொழில் செய்கிறீர்கள்? எவ்வளவு நிலம் உள்ளது? என்ன சாகுபடி செய்கிறீர்கள் என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.அதற்கு பதிலளித்த மனுதாரர், 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வதாகக் கூறினார். இதையடுத்து, விவசாயத்தை கவனித்து, நிலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement