அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் பேட்டி செங்கோட்டையன் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்
சென்னை: அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் கல்பாக்கத்தில் பேட்டியளித்த போது கூறியதாவது: அதிமுகவில் இருக்கிற வரைக்கும்தான் கவுரமாக இருக்க முடியும். அதிமுகவிலிருந்து வெளியேறி விலாசம் தெரியாமல் போனவர்களின் நிலைமைதான் செங்கோட்டையனுக்கும் ஏற்படும். இயக்கத்திற்கு களங்கம் விளைவித்ததால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
Advertisement
இனி அவர் எந்த இயக்கத்திற்கு சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்த இயக்கத்தில் இருக்கிற வரைக்கும் தான் கவுரவமாக இருக்க முடியும். அவர்கள் இந்த இயக்கத்திலிருந்து வெளியேற்றப்படும்போது, மற்றவர்கள்போல் அவர்களும் விலாசம் தெரியாமல் போகிற நிலைமைதான் உருவாகி இருக்கிறது. அதே நிலைமைதான் செங்கோட்டையனுக்கும் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement