இன்று மாலை அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: திமுகவில் இணைந்தபின் மனோஜ் பாண்டியன் பேட்டி
நெல்லை: ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஓ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன்; முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கையில் திராவிடக் கொள்கையை பாதுகாக்க திமுகவில் இணைந்தேன். இன்று மாலை 4 மணிக்கு எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.
பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது. இன்றைய அதிமுக வேறோருவரின் சொல்பேச்சு கேட்டு நடக்கக்கூடிய இயக்கமாக உள்ளது. தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மாவட்ட செயலாளர்களை கூட்டி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி அறிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி தற்போது கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது ஏன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவில்லை?
ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் போல நானும் எடப்பாடியை தோற்கடிக்கவே செயல்படுவேன். திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறினார்.