சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேச, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடந்ததா? இல்லையா? அதைத்தான் அமைச்சர் குறிப்பிட்டுப் பேசினார்” என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்துகொண்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அமளியில் ஈடுபட்டால் காவலர்களால் வெளியேற்றப்படுவீர்கள் என்று சபாநாயகர் எச்சரித்திருந்தார். சபாநாயகர் எச்சரித்திருந்த நிலையில் அவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த அதிமுகவினர் அவை வாயிலில் நின்று கோஷம் எழுப்பினர்.