சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்த போலீசார்: நில மோசடி வழக்கில் அதிமுக பிரமுகர்கள் கைது
சேலம்: எடப்பாடி கொங்கணாபுரம் அருகே நில மோசடி புகாரில் அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். அதிமுக பிரமுகர்கள் பச்சமுத்து, ராஜமாணிக்கத்தை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மகுடஞ்சாவடியைச் சேர்ந்த கந்தசாமி, வெள்ளரி வெள்ளி கிராமத்தில் நிலம் வாங்க அதிமுக பிரமுகர்களை அணுகி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகியோரிடம் 3.56 ஏக்கர் நிலம் வாங்க ரூ.1.5 கோடி தந்துள்ளார் கந்தசாமி. 3.56 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக ரூ.2.5 கோடி பெற்றுக் கொண்டு இருவரும் ஏமாற்றியதாக கந்தசாமி புகார் கூறியுள்ளார்.
அதே பகுதியில் மற்றொரு நிலத்தை வாங்குவதற்காக மேலும் ரூ.1 கோடியை கந்தசாமி அதிமுக பிரமுகர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அதிமுக பிரமுகர்கள் இருவரும் நிலத்தை கிரையம் செய்து தராமல் தாமதித்து வந்துள்ளனர். ரூ.1.50 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தை வேறொவருக்கு விற்றுவிட்டதாக கந்தசாமி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 2வது முறையாக ரூ.1 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தை இதுவரை கிரையம் செய்து தராமல் ஏமாற்றுவதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கந்தசாமி அதிமுக பிரமுகர்கள் இருவர் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வெள்ளரி வெள்ளி பகுதியில் சுமார் 3.56 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி கந்தசாமியை ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் கொங்கணாபுரம் அருகே காரில் செல்லும் போது அதிமுக பிரமுகர்கள் இருவரையும் போலீஸ் சுற்றி வளைத்தது.