தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஆட்சியில் ரூ.3.72 கோடி மோசடி: வேலுமணி நண்பர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு

Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 8 ஒன்றியங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.3.72 கோடி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகி, முன்னாள் அமைச்சர் வேலுமணி நண்பர் மற்றும் 8 பிடிஓக்கள் உள்பட 11 பேர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் முருகானந்தம்(53). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜக பொருளாளர். இவரது அண்ணன் ரவிசந்திரன்(55), தம்பி பழனிவேல்(50). இதில் பழனிவேல் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை பிடிஓவாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-2020ல் அதிமுக ஆட்சி காலத்தில் ெதருக்களில் சோலார் விளக்கு அமைக்கப்பட்டது. மணமேல்குடி, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், அறங்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, குன்னாண்டார்கோவில், திருமயம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் சோலார் விளக்கு அமைத்ததில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. பழனிவேலுக்கு சொந்தமான நாகா டிரேடர்ஸ், முருகானந்தத்தின் மனைவி காந்திமதி நடத்தி வரும் வீரா ஏஜென்சி மற்றும் புதுக்கோட்டை பிரிட்டோ நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா(51) என்பவர் நடத்தி வரும் ஹெச்எஸ்பி நிறுவனங்களில் இருந்து சோலார் விளக்குகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் லாபம் அடைய அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி செய்ததாக புதுக்ேகாட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக கடந்த 3-11-2023ல் டிஎஸ்பி இமயவரம்பன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 30 வாட்ஸ் கொண்ட ஒரு சோலார் விளக்கு ரூ.10,952க்கு வாங்குவதற்கு பதில் ரூ.59,900க்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, கந்தர்வகோட்டையில் 72 விளக்குகளை காந்திமதி நடத்தும் வீரா நிறுவனத்திடமும், ஷேக்அப்துல்லா நடத்தும் எஸ்எஸ்பி நிறுவனத்திடம் ரூ.43லட்சத்து 55ஆயிரத்து 928 கொடுத்து வாங்கியுள்ளனர்.

அதேபோல் மணமேல்குடியில் 130 விளக்கு, அறந்தாங்கியில் 136, அரிமளத்தில் 96, திருமயத்தில் 99 விளக்குள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. திருவரங்குளம், கறம்பக்குடியிலும் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது. மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 799 சோலார் தெருவிளக்குகள் வாங்கியதில் அரசுக்கு 3 கோடியே 72லட்சத்து 24 ஆயிரத்து 716 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி(59), அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி(59), கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி(61), திருமயம் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்(54), கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி(56), மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன்(57), குன்னாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி(55), திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பாளர் அசோகன்(62) மற்றும் பழனிவேல், காந்திமதி, ஷேக்அப்துல்லா ஆகிய 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றுமுன்தினம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகானந்தமும், பழனிவேலுவும் கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக கடந்த நவ.29ம் தேதி இவர்கள் தொடர்பான வீடுகள் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பழனிவேல் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement