அதிமுக - பாஜ முரண்பாடு தலைமை தீர்வு காணும்: எல்.முருகன் பேட்டி
Advertisement
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இன்று அளித்த பேட்டி: நடிகர் விஜய் இப்போதுதான் முதல் முறையாக வெளியே வந்துள்ளார். மூன்று நிமிடம் மக்களிடையே பேசி உள்ளார். அவருக்கு மக்கள் எப்படி வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.
‘‘அதிமுக, பாஜ தலைவர்களின் பிரசாரத்தில் முரண்பாடு உள்ளதே?’’ என்ற கேள்விக்கு, ‘‘எதுவாக இருந்தாலும் தலைமை அமர்ந்து பேசி அதற்கு தீர்வு காணும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை அமித்ஷா தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளன’’ என்று எல்.முருகன் தெரிவித்தார்.
Advertisement