அதிமுக-பாஜ கூட்டணி உருவானதில் எனது பங்கு ‘ஜீரோ’ கூட்டணி ஆட்சியில் மாற்று கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் எடப்பாடி பேச வேண்டும்: அண்ணாமலை அறிவுரை
இந்த கூட்டணியில் என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று யார் பேசினார்கள் என்பதில் என் பங்கு இல்லை. அப்படியிருக்கும் போது என் தலைவர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்வதை தான் நான் கேட்டாக வேண்டும். அவர் ஒரு முறை அல்ல. பலமுறை மிக தெளிவாக சொல்லி விட்டார்.
பிறகு ஒரு தொண்டனாக என்னுயடைய கருத்தை மாற்றி கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் சொன்னால், இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்க எனக்கு தகுதி இல்லை என்று அர்த்தம். என் தலைவர் சொன்ன கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாமல், என்னுடைய தலைவர் கருத்தை நான் வலுப்படுத்த முடியாமல், என் தலைவர் சொன்ன கருத்தில் நான் சந்தேகப்பட வேண்டும் என்றால் இந்த கட்சி நான் தொண்டனாக, தலைவராக இருக்க முடியாது.
கூட்டணி ஆட்சியில் அதிமுகவுக்கு மாற்று கருத்து இருக்குமானால், அமித்ஷாவிடம் பேசலாம். கண்டிப்பாக அவர்கள் பேசி முடிவு எடுக்கலாம். எங்களுடைய தலைவர்கள் சொல்லாத வரை, கட்சி எடுத்த முடிவில் இருந்து நான் எப்படி பின்னால் போக முடியும். கூட்டணி ஆட்சி என்று தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பேச ஆரம்பித்து விட்டார்கள். கூட்டணி ஆட்சி தொடர்பாக எனது தனிப்பட்ட கருத்தை நான் எங்கும் பேசவில்லை. அமித்ஷாவின் கருத்தையே பேசுகிறேன்.
தேவையற்ற அரசியல் கருத்துகளை இப்போது நான் பேசுவதில்லை. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். கட்சி தலைமை கூறினால் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.