அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கலப்படம் தொடர்பாக 28 பேருக்கு எதிரான வழக்கு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
சென்னை:அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கலப்படம் தொடர்பாக 28 பேருக்கு எதிரான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2014ல் நடந்த முறைகேடு தொடர்பாக வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆவினுக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட பாலை திருடிவிட்டு தண்ணீரை கலந்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி வைத்தியநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.