அதிமுக கட்சி விதிகள் திருத்ததை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்!!
சென்னை: அதிமுக கட்சி விதிகள் திருத்ததை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. கே.சி.பழனிசாமி மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனுக்கு வழக்கு தொடர அனுமதி தரப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதி அளித்து 2022ல் தனிப்பட்ட முறையில் வழக்கை நடத்தலாம் என நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement